ஜம்மு:
காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை செய்யப் பட்டனர்.

இதுதொடர்பாக காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புல் வாமா மாவட்டத்தின் த்ரப்கம் பகுதியில் பாதுகாப்பு படையினர் உடன் நடந்த என்கவுண்டரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப் பட்டனர். இவர்கள் அனைவரும் உள்ளூரை சேர்ந்தவர்கள் என்ற போதும், இவர்களுக்கு லஷ்கர் இ தொய்பா அமைப்புடன் தொடர்பு கொண்டார்கள் என்பது தெரிய வந்துள்ளது. பாதுகாப்பு படையினரால் சுட்டு கொலை செய்யப் பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel