1.75 கி.மீ. நீளமுள்ள ராட்சத விண்கல் மே 27 வெள்ளிக்கிழமை அன்று பூமிக்கு அருகில் வரும் என்று நாசா தெரிவித்துள்ளது.
பூமிக்கு அருகில் வரும் பொருட்களை கண்காணிக்கும் நாசா மைய்யம் வெளியிட்டுருக்கும் புதிய தகவலில் 5905 அடி (அதாவது 1.1 மைல்) நீளமும் 3280 அடி அகலமும் உள்ள சிறுகோள் அளவிலான 1989 JA என்று பெயரிடப்பட்டிருக்கும் அபாயகரமான ராட்சத விண்கல் நாளை மறுநாள் பூமியை கடந்து செல்லும் என்று கூறியுள்ளது.
வான்வெளியில் 29,000 க்கும் அதிகமான விண்கல் உள்ளபோதும் 1989 JA போன்று 3280 அடிக்கும் கூடுதலான அகலத்தில் 878 விண்கல்கள் மட்டுமே உள்ளது.
1989 ம் ஆண்டு எலனோர் ஹெலின் என்ற வானியல் ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்த 1989 JA விண்கல் மணிக்கு சுமார் 48280 கி.மீ வேகத்தில் பூமியை நோக்கி நகர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த வேகத்தில் 45 நிமிடத்தில் அது பூமியை சுற்றிவரும் என்று கூறப்படுகிறது.
பூமியில் இருந்து சுமார் 2.5 மில்லியன் மைல்கள் அதாவது சந்திரனை விட 10 மடங்கு அதிக தொலைவில் அது கடந்து போகும் என்ற போதும் பூமிக்கு அருகில் செல்ல இருக்கும் முதல் ராட்சத கோள் இதுவாகத்தான் இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இருந்தபோதும் இது பூமியின் சுற்றுவட்டப்பாதையில் ஊடுருவி செல்ல இருப்பதால் இது அபாயகரமானது என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த பாதையில் இருந்து விலக்க DART (Double Asteroid Redirection Test – DART) எனப்படும் திசைமாற்ற சோதனையை நாசா மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.