சென்னை: தேமுதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் ஜூன் 3-ம்தேதி சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமைக் கழகத்தில் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மாவட்டச் செயலாளர்கள் ஆலோனை கூட்டம் கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் விஜயகாந்தின் ஆணைக்கிணங்க கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் வரும் 2022 ஜூன் 3-ம் தேதி வெள்ளிக்கிழமை, காலை 10 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமைக் கழகத்தில் நடைபெறவுள்ளது.
மாவட்டச்செயலாளர் அனைவரும் தவறாமல் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel