சென்னை:
திமுக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுகிறது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் அளித்த புகாரில் ஜூனியர் விகடன் இயக்குநர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் கெவின் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், பிரபல வார இதழான ஜூனியர் விகடன், யூட்யூபர்கள் சவுக்கு சங்கர், மாரிதாஸ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூனியர் விகடன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு பத்திரிக்கையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில் ஒரு தனிநபர் மீது 21-5-2022 அன்று இரவு 9 மணிக்கு சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் உண்மையை முழுமையாக விசாரித்து அறியாமல், பொய் புகாரை வழக்காக பதிவு செய்து ஊடகங்களை மிரட்டும் போக்கு கண்டனத்திற்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்.