சென்னை: தமிழகத்தின் 3 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது, நடப்பாண்டில் இதுவரை எந்தவாரு டெங்கு உயிரிழப்பும் இல்லை என்று தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு துறை சார்பில் தேசிய டெங்கு தடுப்பு தினம் கடை பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, டெங்கு கொசு எவ்வாறு உற்பத்தியாகிறது அதனை தடுப்பது குறித்து விழி ப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது டெங்கு பரவும் முறை, டெங்கு வந்தால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து அடிக்கும் வாகனங்கள் ஆகிய வற்றை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சுகாதாரத்துறை முதன்மைச்செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டனர். அதனை தொடர்ந்து டெங்கு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலை கண்டறிய 300 பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறியதுடன், இந்தாண்டில் தற்போது வரை டெங்கு காரணமாக எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றார். மேலும், தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.