டில்லி

ந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கேரளாவில் வரும் 27 தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வருடம் தோறும் ஜூன் மாத வாக்கில் தென்மேற்கு பருவமழை கேரளாவில் இருந்து தொடங்குவது வழக்கமாகும்.   இந்தியாவின் பல பகுதிகளுக்கு இந்த தென்மேற்கு பருவமழை முக்கியமானதாக உள்ளது.  இன்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் இந்த வருடம் தென் மேற்கு பருவமழை கேரளாவில் முன் கூட்டியே தொடங்க வாயப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்த தென்மேற்கு  பருவமழை  வரும் 27 ஆம் தேதி முதல் தொடங்கலாம் என அந்த அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனால் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய கிழக்கு வங்கக் கடலில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் இருக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.  மேலும் வரும் 27 ஆம் தேதி முதல் அந்தமான் பகுதிகளில் 5 நாட்களுக்குக் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.