சென்னை: நாடு முழுவதும் வாகன எரிபொருளான பெட்ரோல், டீசல் விலை 37வது தொடர்ந்து ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை எப்போது குறையும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கினறனர்.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்து வருகின்றன. அதன்படி கடந்த மூன்று மாதங்களக்க முன்பு பெட்ரோல் டீசல் விலையானது வரலாறு காணத உச்சத்தை எட்டி, லிட்டர் ரூ. 100ஐ தாண்டியது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அரசியல் கட்சிகளும் போராட்டத்தை நடத்தி வருகின்றன. ஆனால், மத்தியஅரசு அதை செவிமடுக்கமல் உயர்த்தப்பட்ட விலையை குறைக்க மறுத்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு (2021) நவம்வர் 3ந்தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் 106.66 ரூபாய், டீசல் 102.59 ரூபாய்க்கு விற்பனையாகின. இதுவே, பெட்ரோல், டீசல் விற்பனையில் உச்ச விலையாக இருந்தது. இதை குறைக்கும் நடவடிக்கையாக மத்தியஅரசு, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. அதையடுத்து நவம்பர் 4ந்தேதி முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் 10 ரூபாயும் குறைக்கப்பட்டது. அன்று தமிழகத்தில் லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்; டீசல், 91.43 ரூபாய்க்கும் விற்பனையாகின. மாநில அரசும் வாட் வரியை குறைக்க வலியுறுத்தியது. ஆனால், பாஜக ஆளும் மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்கள் வரியை குறைக்க மறுத்து விட்டன.
இந்த நிலையில், 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவடைந்ததும் மீண்டும் எரிபொருள் விலை உயரத்தொடங்கியது. 137 நாட்களுக்கு பின் விலை உயர்த்தும் நடவடிக்கை தொடங்கியத. இதற்கு காரணமாக ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையில் நடைபெறும் போர் மற்றும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு என சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
இதனால், பெட்ரோல் டீசல் விலை மீண்டும் தொடர்ந்து உயர்த்தப்பட்டு லிட்டர் ரூ.110வரை எட்டியது. இதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. இதன் காரணமாக கடந்த 3 மாதமாக விலை உயர்வு இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய் மற்றும் ஒரு லிட்டர்; டீசல் 100.94 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
பொதுமக்கள் பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு விலையை குறைக்கும்படி மத்தியஅரசை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், மோடி அரசோ செவிடன் காதில் ஊதிய சங்குபோல, மக்களின் கஷ்டத்தை கண்டுக்காமல் இருந்து வருகிறது.