புதுடெல்லி:
உண்மையைப் பேசுவது தேசபக்தி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தேசத்துரோக சட்டத்தை நிறுத்தி வைத்து நேற்று உச்ச நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வெளியிட்டது.
இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்ட ராகுல் காந்தி, நாட்டின் நன்மைக்காக உண்மையைப் பேசுவது தேசபக்தி என்றும் அந்த உண்மையை செவி கொடுத்து கேட்பதுதான் ராஜ தர்மம் என்றும் குறிப்பிட்டுள்ளார். உண்மையை நசுக்க நினைப்பது ஆணவம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.