சென்னை:
டைகாலம் எதிரொலியால் மீன்களின் விலை கிடுகிடு அதிகரித்துள்ளது.

மீன்களின் இனவிருத்திக்காக மத்திய-மாநில அரசுகள் ஆண்டு தோறும் மீன்பிடி தடைகாலம் ஒன்றை நிர்ணயம் செய்து நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் கிழக்கு கடற்கரை பகுதிகளான தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மீன்பிடி தடை காலம் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி நள்ளிரவு முதல் தொடங்கியது. ஜூன் 14-ந் தேதி வரையிலான கால அளவில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல் படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மீன்களின் விலை கிடுகிடு அதிகரித்துள்ளது. சென்னை காசிமேட்டில் வஞ்சிரம் கிலோ ரூ.800ல் இருந்து ரூ.1200 ஆகவும், இறால் ரூ.400ல் இருந்து ரூ.650 ஆகவும் விலை அதிகரித்துள்ளது.