சென்னை: காவல்துறை மானிய கோரிக்கை மற்றும் தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் லாக்கப் டெத் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை தலைமை செயலகத்தில், காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில், சி.பி.சி.ஐ.டி. டிஜிபி ஷகில் அக்தர், டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்தில் இரு லாக்கப் டெத் நடைபெற்றுள்ளது. திருவண்ணாமலை தங்கமணி, சென்னை விக்னேஷ் காவல்துறை யினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகிறது. சென்னை விக்னேஷ் கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் 9 போலீசாரிடம் நடைபெற்றது.
இந்த நிலையில், முதலமைச்சருடன் சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் உள்பட அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். மேலும், சட்டப்பேரவையின் காவல்துறை மானிய கோரிக்கை 9, 10 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் முதலமைச்சர் தலைமையில் இன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது.