டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3,275 பேருக்குத் தொற்று: 3,010 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தற்போது 19,719 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மத்திய சுகாதாரத்துறை நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து இன்று காலை 8மணி அளவில் தகவல் வெளியிட்ட உள்ளது. அதன்படி, கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 3275 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. நேற்று பாதிப்பு 3,205 ஆக இருந்த நிலையில், இன்று மேலும்அதிகரித்து உள்ளது. இதனால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4,30,91,391 ஆக உள்ளது. தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 0.77 சதவிகிதமாக உள்ளது. வராந்திர தொற்று பாதிப்பு 0.78 சதவிகிதமாக உள்ளது.
நேற்று 3,010 பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,25,47,699 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.74 சதவிகிதமாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 55 பேர் உயிரிழந்ததால் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,23,975 ஆக உள்ளது.
தற்போது நாடு முழுவதும் 19,719 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.05 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை 189.63 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 83.93 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,23,430 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.