சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு  கடந்த ஏப்ரல் மாதம்  6-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தினசரி   துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் மற்றும் நிதிஒதுக்கீடு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த தொடர்  மே 10 ஆம் தேதி வரை  22 நாள்கள் நடைபெறவுள்ளன. இதுவரை பல்வேறு துறை சார்பிலான மானிய கோரிக்கை விவாங்கள் நடைபெற்று முடிவடைந்த நிலையில், இன்று (5-ம் தேதி)  போக்குவரத்து,  சுற்றுலா,  சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறவுள்ளது.

முன்னதாக பேரவையின் கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சி சட்டமன்றஉறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், சுற்றுலாத்துறை அமைச்சர் மதி வேந்தன் ஆகியோர் பதில் அளித்து புதிய அறிவுப்புகளை அறிவிப்பார்கள்.

இதனிடையே,2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக திருத்த சட்ட முன்வடிவை பேரவையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிமுகம் செய்கிறார் .இந்த புதிய மசோதாவின்படி, அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணை வேந்தரை ஆளுநருக்கு பதிலாக அரசே நியமிக்கும். ஏனெனில், அம்பேத்கர் சட்ட பல்.கழக வேந்தராக முதல்வர் இருக்கும் வகையில் இந்த திருத்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.