டெல்லி: சில மாநில அரசுகள் கொரோனா தடுப்பூசி போடுவது கட்டாயம் என வலியுறுத்தி வந்த நிலையில், தடுப்பூசி எடுத்துக்கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

2019ம் ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா எனப்படும் பெருந்தொற்று உலக நாடுகளின் வாழ்வாதாரத்தையே புரட்டிப்போட்டுள்ளது. இதை தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி ஒன்றே தீர்வாக கருதப்பட்டது. அதன்படி, இந்தியாவில் கடந்த ஆண்டு (2021) ஜனவரி 16ந்தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 188 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன. இதற்கிடையில் தொற்று பரவலை தடுக்க சில மாநில அரசுகள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என அரசாணை பிறப்பித்தது. தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே பொது இடங்களில் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தன.

இதனை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எல்.என். ராவ் மற்றும் பி.ஆர்.கவாய் அமர்வில் பல்வேறுகட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, இன்று இறுதி தீர்ப்பு அளித்துள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்.என். ராவ் மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் தங்கள் உத்தரவுகள் கோவிட்-பொருத்தமான நடத்தைக்கு நீட்டிக்கப்படவில்லை, ஆனால் “விரைவாக உருவாகும் சூழ்நிலையில்” தடுப்பூசிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டது என்று கூறினார்.

மேலும், எந்த ஒரு தனி நபரையும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது. சில நிபந்தனைகளை உருவாக்கி அதன் கொள்கை களை வகுக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், அரசியல் சாசனப் பிரிவு 21-ன் கீழ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள யாரையும் கட்டாயப்படுத்த முடியாது.

கொரோனா தடுப்பூசி செலுத்தாததவர்கள் பொது இடங்களுக்கு வருவதற்கு அனுமதி இல்லை என்று மாநில அரசு விதித்துள்ள கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்றும் தடுப்பூசி சோதனைத் தரவுகளைப் பிரிப்பது குறித்து, தனிநபர்களின் தனியுரிமைக்கு உட்பட்டு, ஏற்கனவே நடத்தப்பட்ட மற்றும் பின்னர் நடத்தப்படும் அனைத்து சோதனைகளும், அனைத்து தரவுகளும் மேலும் தாமதமின்றி பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டும்” என்று நீதிமன்றம் கூறியது.

“குழந்தைகளுக்கான தடுப்பூசியைப் பொறுத்தவரை, நிபுணர்களின் கருத்தை நாம் யூகிக்க முடியாது, தடுப்பூசி உண்மையில் உலகளாவிய தரநிலைகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுகிறது. இருப்பினும், எதிர்மறையான எதிர்விளைவுகளின் தரவு விரைவில் வெளியிடப்பட வேண்டும்.”

இவ்வாறு கூறியுள்ளது.