கோவை-ஷீரடி நேரடி ரயில் சேவை தொடங்கப்படுவதை ஒட்டி செய்தியாளர் சந்திப்பு நடந்தது.
ஹரிகிருஷ்ணன் ஐ.ஆர்.டி.எஸ்., இந்த நிறுவனத்துக்கான விளம்பரப்படத்தில் நடித்த ஜனனி ஐயர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
குத்துவிளக்கேற்றி ஜனனி ஐயர் பேசியபோது, “இந்த விளம்பரப் படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றி எப்படி வெளிப்படுத்துவது என்று எனக்குத் தெரியவில்லை.
கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற கேள்விக்கு சில அதிசயங்கள் நடந்தால் தான் பதில் கிடைக்கிறது. பத்து நாட்களுக்கு முன் தான் சாய் பாபாவை பற்றிய ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தேன். திடீரென தர்மா போன் செய்து ஷீரடி ரயில் ஒன்றிற்கு விளம்பரப்படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது என்றார்.
எனக்கு இப்போது அதை சொல்லும்போது கூட புல்லரிகின்றது சாயிபாபாவின் இருப்பை உணர்ந்தேன். அதனால் தான் இந்த விளம்பரப்படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்துள்ளது. நானும் எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டேன்.
இதை இயக்குனர் ஜெய்குமாருடன் இயக்கியுள்ளார். நான் 10 ஆண்டுகளுக்கு முன்பு இவருடன் வேலை பார்த்திருக்கிறேன். மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி. நீங்கள் பார்த்தது போல் இந்த ரயிலில் அனைத்து சிறப்பு வசதிகளும் உள்ளன. நானும் இந்த ரயிலில் பயணம் செய்து ஷீரடி செல்ல வேண்டும் என ஆசை கொள்கிறேன். அது நடக்கிறதா என்று பார்ப்போம். நீங்களும் இந்த ரயிலில் பயணம் செய்து அனைத்து வசதிகளையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
இந்த ரயில் வரும் 17ம் தேதி செய்வாய்க்கிழமை கோவையில் இருந்து புறப்பட்டு மறுநாள் புதன் கிழமை ஷீரடிக்குச் செல்கிறது. பிறகு வியாழக்கிழமை மாலை அங்கிருந்து பிறப்பட்டு மறுநாள் வெள்ளிக்கழமை கோவைக்கு வந்து சேரும்.
இந்த ரயிலுக்கான முன்பதிவை ரயில்வேயில் இருந்து பெற முடியாது. குறிப்பிட்ட நிறுவனத்தில் இருந்தே பெற வேண்டும். அதே போல ரயிலில் உணவு சேவையையும் அந்நிறுவனமே கவனிக்கிறது.
ரயிலை இயக்கும் பொறுப்பு மட்டுமே ரயில்வே நிர்வாகத்துக்கு உண்டு.
ஆக, இது ஒரு தனியார் ரயில்.
இந்நிறுவனத்தின் சிஇஓ. உமேஷ் பேசும்போது, “எனது நிறுவனம் மூலம் பாபாவின் பக்தர்களை அவருடைய இடத்திற்கு அழைத்துச் செல்வதை பெருமையாக நினைக்கிறேன்!” என்றார்.
இறுதியில் தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி முடிவுற்றது.