லக்னோ: கோவிட் வழக்குகளின் அதிகரிப்பு காரணமாக உ.பி.யின் கவுதம்புத் நகரில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது வரவிருக்கும் பண்டிகைகள் காரணமாக, தொற்றுநோய் பரவலை வரும் கருத்தில் கொண்டு, மே 1 முதல் 31 வரை கெளதம் புத் நகரில் பிரிவு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத்தொடங்கி உள்ளது. குறிப்பிதாக தலைநகர் டெல்லி, உ.பி. உள்பட சில மாநிலங்களில் தொற்று பரவல் உயர்ந்து வருகிறது. இதனால் அங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் நாடு முழுவதும் அனைவரும் முக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிட்ப்பட்டு உள்ளது.
நேற்றைய காலை நிலவரப்படி டெல்லியில் அதிகபட்சமாக 1,520 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.உத்தர பிரதேசத்தில் 275 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்ச பாதிப்பு உ.பி.யில் உள்ள கவுதம்புத் நகரில் காணப்படுகிறது. இதையொட்டி, அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு உள்ளது. இருந்தாலும், வரவிருக்கும் பண்டிகைகள் மற்றும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு மே 1 முதல் 31 வரை கவுதம்புத் நகரில் மட்டும் 144 தடை போடப்பட்டுள்ளது.
அதன்படி, பொது இடங்களில் முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் ஒன்று கூடி நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தேர்வுகளின் போது பள்ளிகளில் சமூக இடைவெளி பராமரிக்கப்படும்.
உயர் அதிகாரிகளின் அனுமதியின்றி யாரும் போராட்டங்கள் அல்லது உண்ணாவிரதப் போராட்டம் நடத்த கூடாது.
வழிபாட்டுத் தளங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதுடன், பொது இடங்களில் பூஜைகள் நடத்த அனுமதிக்கப்படாது
என்றும் உ.பி. காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.