டெல்லி, பிரபல நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசின் ரூ.7.27 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்க துறை முடக்கி உள்ளது. இவர் இரட்டை இலை பெற தேர்தல் ஆணையர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் புரோகக்கராக  சுகேஷ் சந்திரசேகருக்கு நெருக்கமானவர்.

பிரபல இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரது பெயர் இரட்டை இலை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்ட போதுதான் நாட்டு மக்களுக்கு தெரிய வந்தது. ஆனால், இவர் பல ஆண்டுகளாக இதுபோன்ற இடைத்தரர்கள் செய்து பல பங்களாக்கள், கார்கள் என ஆடம்பரமாக வாழ்ந்து வந்தவர். அகில இந்திய அளவில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்கள், சினிமா பிரபலங்களுடன்  தொடர்பில் உள்ளனர் இதை வைத்துக் கொண்டு இவர் ஏராளமானோரை ஏமாற்றி பணம் சம்பாதித்து வந்தார்.

ஆனால், ஜெ.மறைவுக்கு பிறகு இரட்டை இலையை கைப்பற்ற நடத்தி முயற்சியின்போது, கடந்த 2017ம் ஆண்டு டி.டி.வி. தினகரன் தரப்புக்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறி டெல்லி குற்றவியல் போலீசார் டி.டி.வி. தினகரன், அவருடைய நண்பர் மல்லிகார்ஜுன், தரகர் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில்சுகேஷ் சந்திரசேகர் மட்டும் சிறையில் உள்ளார். இவர்மீது பல்வேறு மோசடி வழக்குகள் உள்ளன. இவருக்கு சொந்தமான சென்னை பங்களாவில் கடந்த ஆண்டு அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பல வெளிநாட்டு கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது.

மேலும் சுகேஷ் சந்திரசேகருக்கு பல நடிகைகளுடன் தொடர்பு இருந்ததாகவும், அவரது காதலியாக பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்  இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பான ஆவனங்கள் சிக்கியதும், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சாட்சியமாக சேர்க்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசிடம் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில்  அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த அக்டோபரில் விசாரணை நடத்தினர்.

சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையில் சுகேஷ் சந்திரசேகருடன் உடனான தொடர்பு  பணமோசடி மற்றும், ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு விலை உயர்ந்த குதிரை, பாரசீக பூனை உள்பட ரூ.10 கோடி மதிப்புள்ள பொருட்களை பரிசாக அளித்துள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து,  ஜாக்குலினுக்கு சொந்தமான ரூ.7.27 கோடி மதிப்பிலான அவரது சொத்துகளை முடக்கினர்.  அவற்றில் ரூ.5.71 கோடி மதிப்பிலான பரிசு பொருட்களை சுகேஷ் கொடுத்திருக்கிறார் என அதிகாரிகள் மதிப்பிட்டு உள்ளனர்.

இதுதவிர, நடிகை ஜாக்குலினின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு சுகேஷ் 1 லட்சத்து 73 ஆயிரம் அமெரிக்க டாலர் மற்றும் 27 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர் அளவுக்கு பணமும் கொடுத்து வைத்துள்ளதும் தெரிய வந்துள்ளது.