சென்னை:
சிவகங்கையில் வேளாண்மைக் கல்லூரி , மாணவர்களுக்கும் கிடைத்த வரப்பிரசாதம் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வேளாண் கல்வியின் முக்கியத்துவம் கருதி, கரூர் மாவட்டம், நாகப்பட்டினம் (கீழ்வேளூர்), சிவகங்கை (செட்டிநாடு) ஆகிய மூன்று மாவட்டங்களில் ரூ.30 கோடி மதிப்பில் அரசு வேளாண்மைக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், சிவகங்கையில் புதிதாக அமையுள்ள வேளாண்மைக் கல்லூரி, மாணவர்களுக்கும் விவசாயிகளுக்கும் கிடைத்த வரப்பிரசாதமாக அமைந்து விட்டது என்றும், அரசின் அறிவிப்பு வெளிவந்த ஓராண்டுக்குள் வகுப்புகள் தொடங்கி பாடங்கள் கற்றுக் கொடுக்கப்படும் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தெரிவித்தார்.