புதுடெல்லி:
கொரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
நாட்டின் சில பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து தமிழ்நாடு, தெலுங்கானா, ஹரியானா, பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் முகக்கவசம் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் இன்று நண்பகல் 12 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளதாக பிரதமர் மோடியின் டிவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நிலவரத்தை ஆய்வு செய்ய இந்த கலந்துரையாடல் நடைபெற உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.