டெல்லி: டிவிட்டருக்கு இனி இருண்ட காலம், அடுத்து என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என ஊழியர்களிடம் டிவிட்டர் நிறுவன சி.இ.ஓ. பராக் அகர்வால் பேசிய நிலையில்,  டிவிட்டர் நிறுவனத்தை வாங்கும்  எலான் மஸ்க் பேச்சு சுதந்திரம் குறித்து தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரும்இ, டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியுமானஎலோன் மஸ்க்,  சமூக ஊடக நிறுவனமான டிவிட்டரை வாங்குவது உறுதியாகி உள்ளது.  கடந்த சில காலமாக டிவிட்டரை வாங்க எலன் மஸ்க்  முயற்சித்து வந்த நிலையில், தற்போது  ஒப்பந்தம் இறுதியாகியுள்ளது. அதன்படி டிவிட்டர் நிறுவனத்தை  44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிவிட்டர்  நிர்வாகக் குழுவில், சிஇஓ ஆக இந்தியாவைச் சேர்ந்த பராக் அகர்வால் இருந்து வருகிறார்.  இவர் முக்கிய உறுப்பினராக இருக்கும் நிலையில், எலான் மஸ்க் நிர்வாகத்திற்கு வந்த பின்பு எலான் மஸ்க் பராக்-ஐ பணி நீக்கம் செய்ய வாயப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தனது ஊழியர்களிடம் பேசிய பராக் அகர்வால், டிவிட்டருக்கு இனி இருண்ட காலம், அடுத்து என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். இது பரபரப்பாக பேசப்படுகிறது. டிவிட்டரில் எலன் மஸ்க் அதிரடி மாற்றங்களை கொண்டு வர விரும்புவதாகவும், இதனால் பலர் வேலை இழந்து புதியவர்கள் வேலைவாய்ப்பு பெறும் நிலை உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், டிவிட்டரை கைப்பற்றியதுடன் பேச்சு சுதந்திரம்  குறித்து எலன்மஸ்க் டிவிட் பதிவிட்டுள்ளார்.  அதில் அவர் பேச்சு சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். பேச்சு சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் அடிப்படை என்று  பதிவு செய்த எலான் மஸ்க், ட்விட்டர் ஒரு டிஜிட்டல் டவுன் சதுக்கம், மனிதநேயத்தின் பார்வையில் முக்கியமான எதிர்கால பிரச்சினைகள் விவாதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எலோன் மஸ்க் டிவிட்டரை வாங்கியதற்கு தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.