சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3ந்தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும், ஒமந்தூரார் அரசின் தோட்டத்தில் கருணாநிதிக்கு சிலை வைக்கப்படும் என்றும் தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று மின்சாரம்,மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை,திறன் மேம்பாட்டு துறை,தொழிலாளர் நலன் ஆகிய துறைகளின் மானிய கோரிக்கைகளின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விதி 11ன் கீழ் அறிக்கை வாசித்தார்.

அதன்படி ”5 முறை தமிழக முதல்வராக பொறுப்பேற்று 19 ஆண்டுகள் பதவி வகித்தவர் கலைஞர் கருணாநிதி அவர்கள், மகளிருக்கும் சொத்துரிமை,உழவர்களுக்கு மின்சாரம்,அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கும் திட்டம் ஆகியவற்றை கொண்டு வந்தவர் முன்னாள் முதல்வர் கலைஞர். கலைஞர் அவர்கள் கைம்பெண் மறுமணம் நிதி உதவி, மகளிர் சுய உதவிக் குழுக்கள், பெரியார் சமத்துவப்புரம் ஆகிய திட்டங்களை தந்தவர்.

எனவே,கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி இனி “அரசு விழாவாக” கொண்டாடப்படும்”, என்று கூறியுள்ளார். மேலும், ஒமந்தூரார் அரசின் தோட்டத்தில் கருணாநிதிக்கு சிலை வைக்கப்படும் என்றும் தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் உரை வீடியோ லிங்க்…

https://twitter.com/i/broadcasts/1nAJEYRBymkJL

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அப்போது  “தமிழகத்தை 5 முறை ஆட்சி செய்தவர் மறைந்த முதல்வர் கருணாநிதி. 19 ஆண்டுகளாக முதல்வராக இருந்தவர். நாம் இன்று காணும் நவீன தமிழகத்தை உருவாக்கியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. தமிழகத்தின் அடையாளங்களை எல்லாம் உருவாக்கியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. தலைவர்களோடு தலைவராக வாழ்ந்த அவர், பரந்து விரிந்த இந்த இந்திய அரசியலுக்கு வழிகாட்டியாக இருந்தவர்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதி அரசு விழாவாக இனி கொண்டாடப்படும். வரும் ஜூன் 3-ம் தேதி சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை நிறுவப்படும் என்பதை அறிவிப்பதில் பெருமைப்படுகிறேன்.

நீண்ட தூரம் ஓடினால்தான் அதிக தூரம் தாண்ட முடியும் என்று அடிக்கடி சொல்வார் மறைந்த முதல்வர் கருணாநிதி. நீண்ட தூரம் இந்த தமிழினத்துக்காக ஓடியவர் அவர். அவரை அதிகதிக உயரத்தில் உயர்த்திப் பார்ப்பதை தனது கடமையாக கருதுகிறது தமிழக அரசு” என்று அவர் கூறினார்.