சென்னை: பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என்று இன்று காலை மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகளுடன் காணொளி காட்சி மூலம் அசனை நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் சற்று அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. மேலும் இந்தியாவில் பல மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து இருப்பதால், மீண்டும் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க மாநில அரசுகளுக்கு மத்தியஅரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக ஆட்சியர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார்.
இன்று காலை 9.30மணி அளவில் தொடங்கி நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதார அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களுடன் விவாதித்து வருகிறார். தொடர்ந்து அவர்களிடையே உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், கொரோனா பரவலை தடுக்க பொது இடங்களிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். வடமாநிலங்களில் கொரோனா அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. சென்னை ஐஐடியிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. பிற மாநிலங்களிலுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் குறைவுதான என்றாலும், மக்கள் முககக்வசம் அணிவரை உறுதி செய்யும் வகையில் ஆட்சியர்கள் கவனம் செலுத்த வேண்டும். எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும், கொரோனாவை எதிர்கொள்ள தடுப்பூசி ஒன்றே சிறந்த ஆயுதம். தமிழ்நாட்டில் 41.66% பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.