திருவனந்தபுரம்: மருத்துவ சிகிச்சைக்காக மீண்டும் வெளிநாடு செல்கிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன். இது அவரது 3வது வெளிநாட்டு பயணம் என்று கூறப்படுகிறது.

கேரள முதல்வராக இருக்கும் பினராயி விஜயன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவரது நோய் குறித்து ஆரம்பத்தில் தெரிய வந்ததும், கடந்த 2018ம் ஆண்டு முதல்முறையாக அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றார். அங்குள்ள மினி சோட்டா ரோஸ்செஸ்டர் மயோ ஆஸ்பத்திரியில் 17 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்றார். அதைத்தொடர்ந்து, தொடர் சிகிச்சைக்காக கடந்த ஆண்டு ஒருமுறை அமெரிக்கா சென்று வந்தார்.

இந்த நிலையில், 3வது முறையாக நாளை அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக  செல்ல உள்ளார். இரு வாரங்களுக்கு மேல் அவர் மருத்துவமனையில் தங்கியிருப்பார் என கூறப்படுகிறது. மே மாதம் 2வது வாரத்தில் அவர் கேரளா திரும்புகிறார்.