சென்னை:
10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு (ஹால் டிக்கெட்டை இன்று பிற்பகல் முதல் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

கொரோனா நோய்த் தொற்று குறைந்துள்ளதால் தமிழகத்தில் இந்த ஆண்டு 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நேரடி தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை முன்னதாக அறிவித்தது. அதன்படி, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5 ஆம் தேதியும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9ஆம் தேதியும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மே 6ஆம் தேதியும் தொடங்குகிறது.
இதற்கான ஹால் டிக்கெட்டை மாணவர்கள் இன்று பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel