சென்னை:
தமிழகத்தில் கொரோனா படிபடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பொது இடங்களுக்கு செல்லும்போது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவர்களில் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது வரை 365 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்றார்.
மஐம் மாநிலம் முழுவதும் பரிசோதனைகள் எண்ணிக்கை 25 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
Patrikai.com official YouTube Channel