
அமெரிக்காவைச் சேர்ந்த ஆஷ்லே ரீட் ஓகுரா என்பவர் வளர்க்கும் கார்டுராய் என்ற பூனை உலக சாதனையில் இடம் பெற்றுள்ளது. சராசரி பூனையின் ஆயுட்காலம் 15 ஆண்டுகள், கார்டுராயின் வயது 26. ஓகுரா இந்த பூனையை ஏழு வயதில் இருந்து வளர்கிறார்.
2014ல், கார்டுராய் இந்த சாதனையை அடைந்தது. பிறகு, டிப்பனி2 என்ற பூனை இந்த சாதனையை முறியடித்தது. 2 மாதங்கள் 20 நாட்களுக்கு முன்புதான் டிப்பனி2 இறந்தது, ஆகையால் கின்னஸ் உலக சாதனையில் கார்டுராய் மீண்டும் இடம் பெற்றுள்ளது .
1967ல் பிறந்து 38 ஆண்டுகள் வாழ்ந்த கிரீம் பஃப் என்ற பூனையே மிக வயதான பூனை என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel