தமிழ் நாட்டில் இன்று 30 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
14,469 பேருக்கு நடத்திய பரிசோதனையில் 30 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
சென்னையில் மட்டும் 19 பேருக்கும் செங்கல்பட்டில் 4 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை, கடலூர், கரூர், மதுரை, மயிலாடுதுறை, சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்களில் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மீதமுள்ள 29 மாவட்டங்களில் புதிதாக தொற்று ஏதும் இல்லை.
24 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 231 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.