சென்னை: திமுக எம்.பி என்.ஆர்.இளங்கோவின் மகன் ராகேஷின் திருஉருவ படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மூத்த காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான கபில்சிபல் கலந்துகொண்டார்.
மார்ச் 10ந்தேதி நடைபெற்ற சாலைவிபத்தில் திமுக எம்.பி.யின் மகன் ராகேஷ் அகால மரணம் அடைந்தார். அதைத்தொடர்ந்து, அவரது நினைவேந்தல் நிகர்ச்ச இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், நினைவேந்தலில் ராகேஷ் திருஉருவ படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர் இளங்கோவனின் மகன் ராகேஷ் விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் காரில் சென்ற போது மார்ச் 10ந்தேதி அன்று விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. அங்கு ராகேஷ் உருவப்படத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து ராகேஷ் சட்ட அறக்கட்டளை தொடங்கும் விழா நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், காங்கிரஸ் எம்.பி. கபில்சிபல் கலந்துகொண்டு ராகேஷ் அறக்கட்டளையை தொடங்கி வைத்தார்.