1980-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்த மோகன் நடித்த பல படங்கள் வெள்ளி விழா கண்டன. 2008-ல் சுட்டப்பழம் என்ற படத்தில் நடித்தவர், திரையுலகை விட்டு ஒதுங்கி இருந்தார்.
தற்போது விஜய் ஸ்ரீ இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக குஷ்பு நடிக்கிறார்.

விஜய் ஸ்ரீ இயக்கும் இப்படத்திற்கு ‘ஹரா’ என்று பெயரிடப்பட்டு உள்ளது.
கோயம்புத்தூர் எஸ்.பி.மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்த நிலையில் சித்திரை 1 – ஐ முன்னிட்டு படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டு உள்ளது. இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
வீடியோ:
Patrikai.com official YouTube Channel