சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மத்தியஅரசு நிறுவனங்களில் போலி சான்றிதழ் மூலம் வடமாநிலத்தவர்களுக்கு பணி வழங்கப்பட்டு இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
தமிழகத்தில் வசித்த வரும் பல வடமாநிலத்தவர்கள் மத்திய அரசு நிறுவனங்களில் போலியான மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்து இருப்பதாகவும், இதுகுறித்து தமிழக தேர்வுத் துறையின் சான்றிதழ் சரிபார்ப்பில் தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மத்தியஅரசு, மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவு தேர்வு மூலமே மாணாக்கர்கள் சேர்க்கை நடத்த வேண்டும் உத்தரவிட்டு உள்ளது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இந்த சூழலில், 200க்கும் அதிகமான வடமாநிலத்தவர்கள் போலி சான்றிதழ் கொடுத்து அஞ்சல் ஊழியர், இந்தியன் ஆயில் நிறுவனம், சிஆர்பிஎஃப் ஆகிய பணியில் சேர்ந்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.