சென்னை: ரெய்காவிக் ஓபன்2022 செஸ் போட்டியில் தமிழக வீரர் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றுள்ளார். அவரது புதிய சாதனைக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஆன்லைன் ரேபிட் செஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்து அசத்தி,  உலக செஸ் அரங்கை மீண்டும் ஒருமுறை தன்பக்கம்  திருப்பிய பிரக்ஞானந்தா, தற்போது மேலும் ஒரு வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்த்வர்இந்திய கிராண்ட்மாஸ்டர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா. இவருடைய வயது 16.  தமிழகத்தின் தலைநகர் சென்னையில் வசித்து வருகிறார். செஸ் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் சிறுவயது முதலே பல்வேறு போட்டிகளில் கலந்து பரிசுகளை குவித்து வருகிறார். தனது 7வது வயதிலேயே அபிமன்யு மிஸ்ரா, செர்ஜி கர்ஜாகின், குகேஷ் டி, ஜாவோகிர் சிந்தாரோவ் ஆகிய இளம் செஸ் வீரர்கள் கொண்ட பட்டியலில் தனது பெயரையும் இடம் பெறச் செய்தவர். இவரது ரு 5முறை உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற  பிரபல செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த்.

கடந்த 2013-ம் ஆண்டு நடந்த 8 வயதுக்குட்பட்டோருக்கான உலக இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில்தான் பிரக்ஞானந்தா தனது முதல் சாம்பியன் பட்டத்தை வென்றார். பின்னர் கடந்த  2016ம் ஆண்டு இளைய சர்வதேச மாஸ்டர் பட்டத்தை வென்றெடுத்தார். இதனால, ரஷ்யாவின் செஸ் நட்சத்திரம் செர்ஜி கர்ஜாகினுக்குப் பிறகு இளைய கிராண்ட்மாஸ்டர் என்ற பட்டத்தை வென்ற என்ற பெருமைக்கு சொந்தமானார்.

அதைத்தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம்  நடைபெற்ற  ஆன்லைன் ரேபிட் செஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்து அசத்தியுள்ளார். இதன்மூலம், உலக செஸ் அரங்கை மீண்டும் ஒருமுறை தன்பக்கம் கவனம் ஈர்த்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு வெற்றி பெற்றுள்ளார். ரெய்காவிக் ஓபன்2022 செஸ் போட்டியில் கலந்துகொண்ட தமிழக வீரரான இளம் கிரான்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று அசத்தி  உள்ளார்.