சென்னை: இந்தியை தமிழ்நாட்டில் நுழையவிடமாட்டோம் – மும்மொழி கொள்கையை எந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆங்கிலத்திற்கு மாற்றாக மாநில மக்கள் இந்தியை கற்றுக்கொள்ள வேண்டும் என பேசினார். இதற்கு தமிழ்நாடு உள்பட பல மாநில அரசியல் தலைவர்கள் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,. தமிழ்நாட்டில் இந்தி மட்டுமல்ல வேறு எந்த மொழியையும் உள்ளே நுழைய விடமாட்டோம் என்று கூறியவர், தமிழகத்தை பொறுத்தளவில் தமிழும், ஆங்கிலமும்தான். மும்மொழி கொள்கை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றவர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூறியதுபோல், தமிழ்தான் எப்போதும் இணைப்பு மொழி என்றார்.
மேலும், தமிழை பிரதமரே சுட்டிக் காட்டி பேசி அதன் பெருமையை ஒப்புக் கொண்டுள்ளார் என்பதையும் சுட்டிக்காட்டினார்.