சென்னை: அதிமுக ஆட்சியில் வேலைக்குப் போகும் பெண்களுக்காக கொண்டு வரப்பட்ட அம்மா இருசக்கர வாகன திட்டம் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசால் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து இன்று சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது அதிமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு அமைச்சர் பெரிய கருப்பன் பதில் அளித்து பேசினார். அப்போது, பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், மகளிருக்கான பைக் திட்டத்தை தொடர்ந்தால், மகளிருக்கு கூடுதல் சுமையாக இருக்கும் என்றார்.
மேலும், பெண்கள் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிப்பதால், பைக் வாங்கும் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மகளிருக்கு கூடுதல் சுமை என்பதால் அம்மா இரு சக்கர வாகன திட்டம் நிறுத்தப்பட்டு உள்ளது என்று அமைச்சர் விளக்கம் கூறியிருப்பது சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.