சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. காலையில் வழக்கமாக நடைபெறும் கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் தெரிவித்து வருகின்றனர். 3 லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட உள்ளதாகவும், வோளண்துறையில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர், மார்ச் மாதம் 18ம் தேதி தொடங்கி 24ம் தேதியுடன் முடிவடைந்தது. 5 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தொடரில் 2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, வேளாண்துறை பட்ஜெட் ஆகியவை தாக்கல் செய்யப்பட்டு அது தொடர்பான விவாதங்கள் மட்டுமே நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, பட்ஜெட் மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்காக இன்றைய தினம் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார்.

அதன்படி, தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது. மே 10ந்தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலையில் வழக்கமாக நடைபெறும் கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்களின்கேள்விகளுக்கு துறை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதவி தெரிவித்து வருகின்றனர்.

வேளாண்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுமா என உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதில் அளித்தார்.

அதுபோல ஏழை மக்களுக்கு இலவச பட்டாக்கள் வாங்கப்படுமா என்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கேள்விக்கு பதில் அளித்த  அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்  3 லட்சம் பட்டாக்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது ‘திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தனி தாலுகாவாக விரைவில் செயல்பட தொடங்கும் என்றார்.

காங்கிரஸ் உறுப்பினர் முனிரத்தினம் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், ‘ சோளிங்கர் தொகுதிக்கு உட்பட்ட கொடைக்கல் கிராமத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்கப்படும். ரூ.94 லட்சம் மதிப்பில் 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,’என்றார்.

மேலும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் காலி பணியிடங்களை வேளாண் படித்தவர்களை கொண்டு நிரப்ப காங்கிரஸ் விடுத்த கோரிக்கைக்கு, எங்கெங்கு காலிப்பணியிடங்கள் உள்ளன என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்,’என்று பன்னீர் செல்வம் கூறினார்.

உறுப்பினர் ராஜேந்திரன் கோள்விக்கு சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு,’ திருவள்ளூர் தொகுதியில் புதிய சிப்காட் அமைப்பது குறித்து முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று கூறினார். மேலும் சூலூரில் 500 ஏக்கரில் தொழில் பூங்கா, பாதுகாப்பு தொழில் வழித்தடத்தில் அமைக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாக குறிப்பிட்டார்.

பழவேற்காடு பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைக்க நிர்வாக ரீதியாக நிதிஒதுக்கி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார். ராமேஸ்வரத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் அமைச்சர் பதில் அளித்தார்.

சோளிங்கர் தொகுதியில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைக்கப்படும் என உறுப்பினர் கேள்விக்கு அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பதில் தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்க, ஆய்வு செய்வதற்கான நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும், சிதம்பரம் பகுதியில் துறைமுகம் அமைப்பதற்கான சூழலை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுப்பினர்களின் கேள்விக்கு  அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பதில் தெரிவித்தார்.

லோவோல்டேஜ் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுமா என்ற கேள்வி எழுப்பிய உறுப்பினருக்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, 8905 மின்மாற்றிகள் அமைப்பதற்காக, ரூ.625 கோடி நிதியை வழங்குவதற்கான நிதி ஒதுக்கப்பட்டு, ஆறு மாதத்தில் நிறைவுசெய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளோம். பிரச்சனை இருக்கும் பகுதிகளில் லோ வோல்டேஜ் பிரச்சனைகள் சரிசெய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

25 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படவிருக்கிறது. வேடந்தாங்கல் பகுதியில் அதற்கான சூழலை ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்கப்படும். சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேலு கேள்விக்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் பதில் கூறினார். அத்துடன் தொலைதூர கிராமங்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கும் திட்டத்தை நாளை மறுநாள்  முதலமைச்ச்ர தொடங்கி வைக்கிறார் என்றும் தெரிவித்தார்.

சோளிங்கர் தொகுதியில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைக்கப்படும்  என உறுப்பினரின் கேள்விக்கு அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பதில் கூறனார்.

வடமாவட்டங்களில் தொழில் துறை வளர்ச்சிக்கான நோக்கத்துடன், தொழிற்பூங்காக்கள் அமைக்க ஆராய்ந்து, சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும். செய்யாறு பகுதியில் தொழிற்பூங்கா அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். மேலும்,  , கோவையில் பாதுகாப்பு தொடர்பான தொழில் நிறுவனங்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என மத்திய அரசு உறுதியளித்திருக்கிறது என்றும் கூறினார்.

 முதல் நாளான இன்று  நீர்வளத்துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அதைத்தொடர்ந்து,  நீர்வளத்துறை மானிய கோரிக்கை மீது இன்று விவாதம் நடைபெறும்.  விவாதங்களுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலுரை வழங்குவார் நீர்வளத்துறை தொடர்பான புதிய அறிவிப்புகளையும் வெளியிடுவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தக் கூட்டத்தொடரில், சொத்து வரி உயர்வு, வன்னியர்களுக்கான 10 புள்ளி 5 சதவீத இடஒதுக்கீடு, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.