டெல்லி: அம்பேர்கர் பிறந்ததினம் மற்றும் தமிழ்ப்புத்தாண்டையொட்டி, நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி பொது விடுமுறை என மத்திய அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 14ம் தேதி இந்தி அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அரசியல் சாசனம் உருவாக காரணகர்த்தாக இருந்தவர்களில் இவரும் ஒருவர். நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் அண்ணல் அம்பேத்கர்.  உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியவர்,  பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 14ம் தேதி, தமிழ் புத்தாண்டு தினத்தை ஒட்டி பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை நடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது மத்திய அரசு அன்றைய தினம் பொதுவிடுமறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அன்று விடுமுறை விடப்படுகிறது.

இந்த வருடம் ஏப்ரல் 14ம் தேதி சட்டமேதை டாக்டர் பாபாசாஹிப் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் அனுசரிக்கப்பட உள்ளது.