சென்னை: கொரோனா காலக்கட்டத்தில் மக்கள் பணியாற்றிய செவிலியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதை கண்டித்து, செவிலியர் கள் தீவிர போராட்டத்தில் குதித்துள்ளனர். இதையடுத்து, செவிலியர்களுக்கு உரிய மாற்றுப்பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மருத்துவ தேர்வாணையம் மூலம் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காலத்தில் 3200 செவிலியர்கள் தற்காலிகமாக பணி அமர்த்தப்பட்டனர். அவர்களில், 2400 செவிலியர்கள் நிரந்தர ஒப்பந்த செவிலியர்களாக பணியமர்த்தப்படுவர் எனவும் மீதமுள்ள 800 செவிலியர் களை எதிர்காலத்தில் காலிப்பணியிடங்களுக்கு ஏற்றவாறு பணியமர்த்தபடுவார்கள் என கடந்த மார்ச் 8ம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அரசு உறுதி அளித்ததற்கு மாறாக, நிதிப்பற்றாக் குறையை காரணம் காட்டி 800 செவிலியர்களை பணியில் இருந்து கடந்த மார்ச் 31 ஆம் தேதியுடன் விடுவித்துள்ளனர்.
இது செவிலியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகஅரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பணியிலிருந்த செவிலியர்களுக் கும் பணி பாதுகாப்பு வழங்கக்கோரி 500க்கும் மேற்பட்ட செவிலியர்கள், இன்று காலை டிஎம்எஸ் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற னர். ஆனால், அவர்களை போராட விடாமல் முன்கூட்டியே காவல் துறையினர் கைது செய்து தேனாம்பேட்டை சமுதாய நலக்கூடத்தில் அடைத்துள்ளனர்.
இதையறிந்த மற்ற செவிலியர்கள், சுமார் 100 க்கும் மேற்பட்டோர் மெரினா கடற்கரை பகுதியில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங் களின் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அகற்றி கைது செய்தனர். அவர்கள் அனைவரும் திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு சமுதாய நலக்கூடங்களில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில், சென்னை திருவான்மியூரில் உள்ள இம்காப்ஸ் நிறுவனத்தின் 75 வது ஆண்டு பவள விழாவை முன்னிட்டு அதன் புதிய கட்டிடங் களை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, செவிலியர்கள் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த மா.சு., பணிநீக்கம் செய்யப்பட்ட 800 செவிலியர்களுக்கு அரசின் சார்பில் உரிய மாற்று பணி விரைவில் வழங்கப்படும். போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் உரிய முன் அனுமதியைப் பெற்று போராடி இருந்தால் காவல்துறையினர் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்க மாட்டார்கள்.
அதுபோல, அம்மா மினி கிளினிக்குகளில் பணியாற்றிய மருத்துவர்களைப் பொறுத்த மட்டில் ஏற்கனவே அவர்கள் தற்காலிக அடிப்படையில் தான் கடந்த ஆட்சியில் பணியமர்த்தப்பட்டார்கள். சம்பந்தப்பட்ட இந்த மருத்துவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்காத வகையில் அரசின் சார்பில் பணி வாய்ப்புகளில் வருங்காலங்களில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.
மேலும், பொதுமக்கள் இன்னும் இரண்டு மாதங்களுக்கு முக கவசம் அணிய வேண்டும். முக கவசம் அணிவதால் எந்த ஒரு பெரிய பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. இருப்பினும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்தார்.