சென்னை:
மிழகத்தில் இதுவரை அமலில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமணம், இறப்பு உள்ளிட்ட சுப, துக்க நிகழ்வுகள் உட்பட பல்வேறு செயல்பாடுகளுக்கு தமிழக அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது. இந்த கட்டுப்பாடுகள் மார்ச் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் மாநிலத்தில் உள்ள 92% மக்களுக்கும், 2வது டோஸ் 75% மக்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பும் வெகுவாக குறைந்து விட்டதால், அதைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதையடுத்து திருமணம், இறப்பு நிகழ்வுகளில் பங்கேற்பதற்கான கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் முக கவசம், தனிநபர் இடைவெளி, கைகால் கழுவி தூய்மை பேணும் நடைமுறைகளை மக்கள் தொடர்ந்து பின்பற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது. தேவையற்ற முறையில் கூட்டம் சேர்வதை தவிர்க்குமாறும் அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும்., பூஸ்டர் டோஸ்க்கு தகுதியானவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.