டெல்லி: இந்தியாவில் இன்றுமுதல் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் திருப்ப பெறப்ப்பட்டுள்ளதாக மத்தியஅரசுஅறிவித்தள்ளது. இதையடுத்து, மாநில அரசுகளும் கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக வாபஸ் பெறுவதாக அறிவித்து உள்ளன.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக, இந்தியாவிலும் கட்டுப்பாடுகள் ஊரடங்கு உள்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதுடன், பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வந்தன. இதனால், தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இதையடுத்து, கடந்த இரு ஆண்டுகளாக மக்களை வாட்டி வதைத்து வந்த கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ள நிலையில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்  கொரோனா கட்டுப்பாடுகளை நீக்குவதா அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார். அதில்,  நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும்  மார்ச் 31ஆம் தேதியுடன்  முடிவுக்கு கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், இன்னும் சில காலம் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும், கைகளை சுத்தப்படுத்துவது போன்ற வற்றை சமூக பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பல மாநிலங்கள் கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளன.

2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தீவிரமாக நடைமுறைக்கு வந்த கொரோனா கட்டுப்பாடுகள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது