சென்னை: துபாய், அபுதாபி பயணம் மகத்தான பயணம், வெற்றிப் பயணம் என 4 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 4 நாட்கள் அரசுமுறை பயணமாக கடந்த 24-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் தனி விமானத்தில் துபாய் சென்றார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, தொழில் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்களும் பெறப்பட்டது. அதையடுத்து, அபுதாபி சென்று அங்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதன்படி துபாய், அபுதாபியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மூலம் தமிழ்நாட்டிற்கு 6,100 கோடி ரூபாய் மதிப்பில் முதலீடுகள் ஒப்பந்தமாகி உள்ளன.
இதையடுத்து தனது முதல் வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாலை 2.45 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை விமான நிலையத்தில் அமைச்சர் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, சி.வி.கணேசன்,, ரகுபதி மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், டிஜிபி சைலேந்திர பாபு, மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் விமான நிலையத்தில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தவர், துபாய், அபுதாபி பயணம் மகத்தான பயணம், வெற்றிப் பயணம் எனக் கூறினார். துபாய் எப்படி ஒரு பிரம்மாண்டமான நாடக உருவாகி இருக்கிறதோ அதேபோல் எனது பயணமும் மிக பிரம்மாண்டமான வகையில் அமைந்தது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
இந்த பணத்தின்போது, 6 நிறுவனங்களுடன் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன எனவும் அடுத்த சில மாதங்களில் மேலும் சில ஒப்பந்தங்கள் போடப்பட உள்ளதாகவும் கூறினார். ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிறுவனங்களின் பெயர் பட்டியலை அறிவித்தார்.
ஒப்பந்தம் போடப்பட்ட 6முக்கிய நிறுவனங்கள் பெயர் பட்டியல் :
- இரும்பு தளவாடங்கள் சார்ந்த நோபல் ஸ்டீல்ஸ் துறையோடு 1100கோடி ரூபாய் மதிபீலான ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.
- ஜவுளிதுறை சார்ந்த WHITE HOUSE நிறுவனத்துடன் 500கோடி ரூபாய் மதிபீலான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
- உணவு துறை சார்ந்த TRANSVEL குழுமத்தோடு கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது
- மருத்துவத்துறை சார்ந்த AASTAR TM Health care நிறுவனத்தோடு 500கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
- சரக்கு போக்குவரத்து நிறுவனத்தை சார்ந்த SHERAF நிறுவனத்துடன் 500கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
- உணவு பதப்படுத்தக்கூடிய தொழில் மற்றும் கட்டுமான துறையை சார்ந்த LULU நிறுவனத்தோடு 3500கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இந்த 6 நிறுவனத்தோடு 6,100கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் 14,700 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக போகிறது..எனவே இந்த பயணம் ஒரு வெற்றி பயணமாக அமைந்திருக்கிறது.
துபாய், அபுதாபி நாட்டின் முக்கியமான துறை சார்ந்த அமைச்சர்களையும்,அரசு சார்ந்த அலுவலர்களையும், பெரிய பெரிய தொழில் நிறுவனங்களின் தலைவர்களையும் சந்தித்து உரையாற்றி இருக்கிறேன். சிறு துறைமுகங்கள் மேம்பாடு உணவு பதப்படுத்துதல், தொழில் பூங்காக்கள் உருவாக்ககூடிய திட்டங்களில் முதலீடு செய்திட முன்வந்து உள்ளார்கள். தமிழகத்தில் தொழில் முதலீடுகாண சூழல் இருப்பதை நான் எடுத்து கூறியுள்ளேன். நான் சந்தித்த அனைவரையும் தமிழகத்திற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளேன். அவர்களின் வருகை தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஒரு அடித்தளமாக இருக்கும்.
கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் காகித கப்பல்களாக தான் இருந்தது. ஆனால் நாங்கள் ஒப்பந்தம் போட்டதோடு அவர்கள் இங்கு வந்து தொழில் தொடங்க நடவடிக்கை துரிதப்படுத்த முதல்வர் அலுவலகத்தில் daash board எழுதி வைத்து ஆய்வு நடத்தி அந்த தொழிலை தொடங்கி நல்ல சூழலை உருவாக்க போகிறோம்.
துபாய் நாட்டில் கொடுத்த வரவேற்பு என்னை தமிழ்நாட்டில் இருந்த உணர்வை தான் எனக்கு கொடுத்தது. அந்தளவு உற்சாகமான வரவேற்பை எனக்கு அளித்தார்கள். எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகளை பற்றி நான் கவலைப்படுவதில்லை. ஏனென்றால் அவர்கள் எதிர்க்கட்சி அப்படி தான் கூறுவார்கள்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.