சென்னை

டந்த ஏப்ரல் – டிசம்பர் மாதங்களில் தமிழகத்தில் அன்னிய நேரடி முதலீடு 41.5% அதிகரித்துள்ளது.

இன்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்கமளிப்பு துறை வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி தெரிய வந்துள்ளதாவது:

கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 3-வது காலாண்டில் அந்நிய நேரடி முதலீடு 53 சதவீதம் அதிகரித்து ரூ,9,332 கோடியாக அதிகரித்துள்ளது.  அந்நிய நேரடி முதலீடு வருகையில் தமிழகத்தின் பங்கு 4 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மொத்தத்தில் தேசிய அளவில் அதிகளவு அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்த மாநிலங்களில் தமிழகம் 5-வது இடத்தில் இருக்கிறது.   கடந்த  2021, ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் தமிழகம் ரூ.8,364 கோடி முதலீட்டை ஈர்த்துள்ளது.

அதே வேளையில்  அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்த வகையில், மகாராஷ்டிரா மாநிலம் 26% பெற்று முதலிடத்திலும், கர்நாடகா 23%, குஜராத் 21 சதவீதம், டெல்லி 13 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளன.

கடந்த 2021ம் ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் இந்தியாவுக்கு அந்நிய நேரடி முதலீடு 16 சதவீதம் குறைந்து ரூ.3 லட்சத்து 19ஆயிரத்து 976 கோடியாக இருந்தபோதிலும் கூட தமிழகத்தில் நல்ல வளர்ச்சி இருந்துள்ளது. தமிழகம் 2021ம் ஆண்டில் 302 கோடி டாலர் அளவுக்கு அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளது.

இது குறித்து தமிழக வளர்ச்சி ஆலோசனைக் குழு உறுப்பினர் பூஜா குல்கர்னி

“தமிழக அரசு கட்டுமானம், நிதிச்சேவை,ஆட்டோமொபைல், மின்னணு மற்றும் எந்திரங்கள் உற்பத்தி, சில்லறை வர்த்தகம், தகவல்தொழில்நுட்ப சேவைப் பிரிவில் அதிகமான அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளது. அதே வேளையில் கொரோனா தொற்று காலத்தில் மற்ற எந்த மாநிலத்தையும்விட தமிழகத்தின் உற்பத்தி துறைதான் அதிகமாகப் பாதிக்கப்பட்டது”

எனத் தெரிவித்துள்ளார்.