டெல்லி: பொதுமக்களை தொல்லைப்படுத்தி வரும் விரைவில் ரத்து செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் கொரோனா பரவல் தொடங்கியதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராகவும், மக்களிடையே கொரோனா பற்றிய விழிப்புணர்வினை வழங்கும் வகையில், அனைத்து செல்போன்களிலும், அழைப்புகளின்போது, முதலில் சில விநாடிகள், கொரோனா காலர் டியூன் வரும். இது தவிர்க்க முடியாத நிலையில் இருந்து வந்தது. ஒருவரை எவ்வவு அவசரமாக தொடர்புகொண்டு பேச வேண்டும் என்று அழைத்தாலும், முதலில் கொரோனா விழிப்புணர்வு அறிவிப்புதான் காதுகளை எட்டும் வகையிலேநே தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தது. பலர் இதனால் எரிச்சல் அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், காலர் டியூன் தொல்லையை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் மற்றும் மொபைல் போன் சந்தாதாரர்களிடம் இருந்து மத்திய தொலைதொடர்புத்துறை மற்றும் சுகாதாரத்துறைக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. இதை ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. தொற்றுநோய் நிலைமை மேம்பட்டுள்ளதால், இந்த ஆடியோ கிளிப்களை (காலர் டியூன்களை) அகற்றவும் மத்திய சுகாதார அமைச்சகம் பரிசீலிக்கிறது” என தெரிவித்தன. இதனால் செல்போன் காலர் டியூனில் இருந்து விரைவில் பொதுமக்களுக்கு விடுதலை கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.