பெரம்பலூர்

மிழ்நாடு மாநில பாலக தலைவரை விசிக தலைவர் திருமாவளவன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் இன்று பெரம்பலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது மண்டல செயலர் கிட்டு, மற்றும் மாவட்ட செயலர் தமிழ் மாணிக்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.  அப்போது செய்தியாளர்கள் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார்.

திருமாவளவன்,

“தனியாருக்கு பொதுத்துறைகள் தாரைவார்க்கப்படுகின்றன. நல்ல லாபத்தில் இயங்கக்கூடிய நிறுவனங்களைக் கூட  மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒப்படைத்து வருகிறது. இதைக் கண்டிக்கிற வகையில், இந்த பொது வேலை நிறுத்தம் மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில், அகில இந்திய அளவில் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகளின் தொழிற்சங்க அமைப்புகளும், அரசு ஊழியர் அமைப்புகளும் பங்கேற்கின்றன.இந்த போராட்டத்துக்குப்  பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும்.

தமிழக முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் வெற்றியடைய வேண்டும். அது தமிழகத்திற்கு மட்டுமல்லாது இந்தியாவிற்கே நல்ல ஒரு வளர்ச்சிக்கு வழிவகுக்கும் . தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒவ்வொரு இடத்திலும் பேசும்போது தன்னை வெளிக்காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக, அரசியல் நாகரிகம் இல்லாமல் பேசி வருகிறார். அவருக்குக் கவன ஈர்ப்பு ஃபோபியா வந்துள்ளது. தன் பக்கம் கவனத்தை ஈர்ப்பதற்காகவே முதல்வர் குறித்து அண்ணாமலை விமர்சித்து வருகிறார்”

என விமர்சித்துள்ளார்.