டெல்லி: எரிபொருட்களின் விலைவாசி உயர்வு, உக்ரைன் போர் நெருக்கடி போன்ற காரணங்களால், நாட்டில் விலைவாசிகளும் உயரத் தொடங்கி உள்ளன. ஏற்கனவே மருந்து பொருட்கள் விலை உயர்வதாக அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், ஏப்ரல் 1 முதல் வாகனங்களின் விலைகளுயும் உயர்கிறது.

வாகனங்கள் தயாரிப்புக்கு தேவவையான மூலப் பொருள்களின்  விலை உயர்வு மற்றும் செலவினம் அதிகரிப்பால் தனது வாகனங்களின் விலையை 4 சதவீதம் உயா்த்தவுள்ளதாக டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் (டிகேஎம்) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மூலப் பொருள்கள் உள்ளிட்ட உள்ளீட்டு செலவுகளில் தொடா்ச்சியான அதிகரிப்பின் பின்னணியில் இந்த விலை உயா்வு அவசியமாகிறது. செலவின அதிகரிப்பால் எங்களின் மதிப்பு மிக்க வாடிக்கையாளா்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய நிறுவனம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. லப்பொருட்கள், உதிரிப்பாகங்களின் விலை அதிகரிப்பால் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.

சொகுசு ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ தனது வாகனங்களின் விலையை ஏப்ரல் 1 முதல் 3.5 சதவீதம் விலையை உயா்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது. மூலப்பொருட்கள், உதிரிப்பாகங்களின் விலை உயர்வு, தளவாடச் செலவுகளை சரிசெய்யும் வகையில் இந்த விலை உயர்வு அமலுக்கு கொண்டு வரப்படும் என்று நிறுவனங்கள் கூறியுள்ளது.

இதைத்தொடர்ந்து மற்ற நிறுவனங்களின் விலைகளும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.