கீவ்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக, அங்கிருந்து வெளியேறியுள்ள வெளிநாடுகளைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களில், இறுதி ஆண்டு மருத்து வம் படித்து வரும் மாணவர்களுக்கு தேர்வு இல்லாமலே, எம்பிபிஎஸ் பட்டம் வழங்க உக்ரைன் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைனில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் மருத்துவம் பயின்று வரும் 5வது ஆண்டு மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கான கட்டாய தேர்வை ரத்து செய்து உக்ரைன் அரசு அறிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. இதனால் அங்கு படித்து வந்த வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்பினர். இந்தியாவிலும் சுமார் 15ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் நாடு திரும்பி உள்ளனர். இதனால், அவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியானது. உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள் தங்களது படிப்பை மீண்டும் தொடர முடியுமா என்றும், தங்களது எதிர்காலம் குறித்து கவலையில் உள்ளனர்.
“நாடு திரும்பியவர்களில் முதலாம் ஆண்டு மாணவர்கள் தொடங்கி இறுதியாண்டு மாணவர்கள் வரை உள்ளனர். கடைசி செமஸ்டர் படித்துக் கொண்டிருந்தவர்கள் பிராக்டிக்கல் தேர்வுகளில் கலந்து கொள்ள வேண்டும். அதை முடிக்காமல் அவர்களால் படிப்பை முடித்ததற்கான சான்றிதழைப் பெற முடியாது” அதனால் அவர்களுக்கு இந்திய அரசு உதவி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்து வருவதாகவும் மத்தியஅரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில், மருத்துவ மாணவர்களில் வயிற்றில் பால் வார்த்துள்ளது உக்ரைன் அரசு. இறுதியாண்டு படித்து வரும் மருத்துவ மாணவர்களின் இறுதித் தேர்வை ரத்து செய்துவிட்டு, எம்.பி.பி.எஸ் பட்டங்களை வழங்க முடிவு செய்துள்ளதாக அறிவித்து உள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட நாட்டில் தேசிய தேர்வை எழுதாமல் அனைத்து இறுதி ஆண்டு மாணவர்களுக்கும் MBBS பட்டங்களை வழங்கும் என கூறியுள்ளது.
உக்ரைனில் மருத்துவம் படித்து வரும் மாணவர்கள், அங்குள்ள “மருத்துவம்”, “பல் மருத்துவம்” மற்றும் “மருந்தகம்” ஆகிய இரண்டு தனித்தனி பாடத் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். உக்ரைன் நாட்டின் தரநிலைகளின்படி, மருத்துவ மாணவர்கள் மூன்றாம் ஆண்டில் KROK-1 மற்றும் ஆறாவது ஆண்டில் KROK-2 தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும். ஆனால், தற்போது போர் காரணமாக, உக்ரேனிய அரசாங்க போர்ட்டலில் பதிவேற்றப்பட்ட அறிவிப்பின்படி, KROK 1 அடுத்த ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது மற்றும் KROK 2 இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. KROK 2 தேர்வுக்கு வராமலேயே நாங்கள் பட்டங்களையும் உரிமங்களையும் பெற முடியும் என்ற அறிவிப்புக்கு அங்கு மருத்துவம் படித்துவந்த மாணாக்கர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மேற்கு வங்காளத்தில் 13 இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் உள்ளனர், அவர்களுக்கு மாநில அரசு ஏற்கனவே அரசு மருத்துவமனைகளில் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை உறுதியளித்துள்ளது. தற்போது உக்ரைன் அரசு அறிவித்துள்ள KROK 2 தேர்வு அறிவிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த மருத்துவ மாணவர்கள், “இந்த ஆண்டு செப்டம்பரில் கட்டாய KROK 2 தேர்வு நடத்தப்பட்டிருந்தால், நாங்கள் தாள் எழுத உக்ரைனுக்கு பறந்து செல்ல வேண்டியிருக்கும், மேலும் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னரே தகுதியான மருத்துவர்களாக அறிவிக்கப்படுவார்கள். ஆனால், தற்போது உக்ரைன் அரசு அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, உக்ரைன் அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தியில், 3ஆம் ஆண்டு மாணவர்களுக்கான கேஆர்ஓகே-1 தேர்வு ஒத்திவைக்கப்படு வதாகவும், கேஆர்ஓகே-2 தேர்வு இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.