சென்னை: தமிழக பட்ஜெட்:சட்டப்பேரவையில் இன்றும், நாளையும் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 18ந்தேதி தொடங்கியது. வரும் 24ந்தேதி வரை நடைபெற உள்ள இந்த அமர்வில், முதல்நாள் 2022-23ம் ஆண்டுக்கான பொதுநிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 19ந்தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்பட்டு, 21ந்தேதி காலை 10மணிக்கு மீண்டும் கூடும் என சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அறிவித்தார்.
அதன்படி, 21ந்தேதி மற்றும் 22ந்தேதி ஆகிய இரு நாட்கள் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற உள்ளது. இதையடுத்து 24ந்தேதி பட்ஜெட் விவாதத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்கிறார்.
சட்டப்பேரவையில் 2022-23- ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இரு தினங்களுக்கு முன்னர் தாக்கல் செய்தார்.அதில், கல்வி, மருத்துவம், கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ள சட்டப்பேரவையின் இன்றைய விவாதத்தில் எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்ப தயார உள்ளதாக கூறப்படுகிறது. தாலிக்கு தக்கம் வழங்கும் திட்டம் முடக்கம், அதிமுகவினர் கைது போன்றவைகளை கொண்டுவர அதிமுக திட்டமிட்ட உள்ளது. மேலும், மேகதாது அணை தொடர்பாக பேரவையில் இன்று தனி தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளதாக கூறப்படுகிறது.