டில்லி

கோவிஷீல்ட் தடுப்பூசி 2 ஆம் தவணைக்கான கால இடைவெளி குறைக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் போடும் நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளது.  இதில் அதிக அளவில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் போடப்படுகின்றன.  இதுவரை சுமார் 181.24 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் இரு தவணைகளாக போடப்படுகின்றன.  இதில் கோவாக்சின் தடுப்பூசி 28 நாட்கள் கால இடைவெளி மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசி 12 முதல் 16 வார இடைவெளியில் போடப்பட்டு வருகின்றன.   இந்த தடுப்பு மருந்தின் நோய் எதிர்ப்புத் திறன் அடிப்படையில் 2ஆம் டோஸ் செலுத்தப்படும் கால இடைவெளி நிர்ணயம் செய்யப்படுகிறது.

தேசிய நொய் த்டுப்பு ஆலோசனைக் குழு கோவிஷீல்ட் தடுப்பூசி இரண்டாம் தவணைக்கான கால இடைவெளியை 8 முதல் 16 வாரங்களாகக் குறைக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.  விரைவில் இந்த மாற்றம் அமலாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.  அதே வேளையில் கோவாக்சின் தடுப்பூசிக்கான 2 ஆம் தவணை கால இடைவெளியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.