டில்லி
மொத்தமாக டாங்கரில் வாங்குவோருக்கு டீசல் விலை லிட்டருக்கு ரூ.25 அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகச் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. தவிர டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் சரிந்து வருகிறது இந்த விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்படுகிறது.
இருப்பினும் 5 மாநில சட்டசபைத் தேர்தல் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி இருந்தது. நேற்று மொத்தமாக டீசல் கொள்முதல் செய்வோருக்கு லிட்டருக்கு ரூ.25 விலை உயர்த்தப்பட்டுள்ளது. பல தொழிற்சாலைகளில் டீசல் மொத்தமாக டேங்கர் லாரிகள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. இவர்களுக்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது.
அதாவது தலைநகர் டில்லியில் டீசல் சில்லறை வி|ற்பனை விலையாக பங்குகளில் ரூ.86.67 உள்ள நிலையில் தொழிற்சாலைகளுக்கு மொத்தமாகக் கொள்முதல் செய்வோருக்கு ரூ.115 என விலை உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் பாதிப்புக்கு உள்ளான தொழிற்சாலைகளுக்கு இது மேலும் பாதிப்பை அளிக்கும் என தொழில் நடத்துவோர் தெரிவித்துள்ளனர்.