திருப்பதி

சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று திருப்பதி கோவில் உண்டியலில் ரூ.5.13 கோடி காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது.

ஆண்டு முழுவதும் திருவிழா போல் கூட்டமாக காணப்படும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தின்சரி ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்கு வருவார்கள்,  இதைப் போல் உண்டியலில் காணிக்கையாக தினசரி ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை பக்தர்கள் செலுத்துவார்கள்.,  தவிர ஆயிரக்கணக்கானோர் முடி காணிக்கை செலுத்துவதும் உண்டு.

கொரொனா கட்டுப்பாடு காரணமாக இடையில் குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.  இதனால் உண்டியல் காணிக்கை மற்றும் முடி ணிக்கை செலுத்துவோரின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்தது.   தற்போது கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் நேற்று ஒரே நாளில் 80,429 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

நேற்று காலை முத இரவு வரை பக்தரக்ள் உண்டியலில் செலுத்திய காணிக்கை இன்று அதிகாலை எண்ணப்பட்டது.  இதன்படி நேற்று ஒரே நாளில் உண்டியலில் ரூஉ. 5.13 கோடி காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது.  தவிர நேற்று மட்டும் 38,182 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.  சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு உண்டியலில் ரூ.5.13 கோடி காணிக்கை செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.