கொடைக்கானல்

நேற்று கொடைக்கானலில் சாரல் மழை பெய்ததால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாகத் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்தது.  இதனால் புற்கள் காய்ந்து காட்டுத்தீ உருவாகி மிகுந்த போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.  கடந்த ஒரு மாதமாக மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது   மாலையில் குளிர் காற்று வீசி வெப்பத்தை தணிக்கிறது

.தற்போது சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அங்குள்ள அப்சர்வேட்டரி, ரோஸ் கார்டன், மோயர் பாய்ண்ட் குணா குகை உள்ளிட்ட பல இடங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் மிகவும் அதிகமாக இருந்தது.  பல இடங்களில் போக்குவரத்து மிகவும் மெதுவாக ஊர்ந்து சென்றது. .நேற்று திடீரென கொடைக்கானல் பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது

இதனால் சுற்றுலாப்பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  சுற்றுலாப்பயணிகள் சாரல் மழையில் நனைந்தபடி ஏரியில் படகு சவாரி செய்தனர்.  பலர் ஏரிக்கரையில் சாரல் மழையில் நனைந்த படி குதிரைச்சவாரி செய்தனர்.   மேலும் சாரல் மழை காரணமாக வெப்பம் வெகுவாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.