பெங்களூரு

க்ரைனில் நடந்த போரில் கொல்லப்பட்ட கர்நாடக மாணவர் நவீன் உடலை அவர் தந்தை மருத்துவ ஆய்வுக்கு தானமாக வழங்க உள்ளார்.

ரஷ்யாவுக்கும் உக்ரைனும் இடையே நடந்த மோதல் தற்போது போராக மாறி தொடர்ந்து யுத்தம் நடந்து வருகிறது.    இதில் ராணுவத்துடன் தொடர்பில்லாத பலரும் உயிர் இழந்து வருகின்றனர்.     உக்ரைன் நாட்டில் இந்தியா உள்ளிட்ட பல வெளிநாட்டவர்கள் மருத்துவக் கல்வி பயின்று வருகின்றனர்.

அவர்களில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நவீன் என்னும் மாணவரும் ஒருவர் ஆவார்.   இவர் கார்கிவ் நகரில் வசிப்பவர் ஆவார்.  இவர் ரஷ்ய ராணுவ குண்டு வீச்சில் கொல்லப்பட்டுள்ளார்.   இவரது உடல் நாளை இந்தியாவுக்கு வர உள்ளது.  நவீன் மரணம் உலக மக்களை கடும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது

மாணவர் நவீனின் தந்தை,

“மருத்துவத்துறையில் ஏதாவது சாதிக்க நினைத்தான்.     அது நடக்காமல் போய் விட்டது.  எனவே அவன் உடலை மருத்துவ ஆய்வுக்காகத் தானமாக வழங்க முடிவு எடுத்துள்ளேன்.   மரணத்துக்கு பிறகும் நவீன் மருத்துவத்துறைக்குச் சேவை செய்யும் வகையில் அவன் உடல் மாணவர்களில் கல்விக்குப் பயன்படட்டும்”

எனத் தெரிவித்துள்ளார்.