மதுரை: மதுரையில் நடைபெற்ற ஹிஜாப் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் தமாஅத் நடத்திய போராட்டத்தில், நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த தமிழ்நாடு தவ்ஹீத் தமாஅத் நிர்வாகிகள்மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறது.
ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து பல மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுபோல மதுரையில் தவ்ஹீத் தமாஅத் அமைப்பு போராட்டம் நடத்தியது. அதில் பேசிய கோவை ரஹமத்துல்லா, மதுரை மாவட்ட தலைவர் அசன் பாட்ஷா, மதுரை மாவட்ட துணை செயலாளர் ஹபிபுல்லா உள்பட பலர் நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்தும், நீதிபதிகளை மிரட்டும் வகையிலும் பேசினர். இதுதொடர்பாக பாஜக சார்பில் புகார் கூறப்பட்டது.
இதையடுத்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கடந்த 17ஆம் தேதியன்று மதுரை மாநகர், த ல்லாகுளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோரிப்பாளையம் பள்ளிவாசல் தெருவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது தெரியவந்துள்ளது. இதில் நீதிபதி குறித்து அவதூறு பேசியதாக, மாநிலதணிக்கை குழு உறுப்பினர் கோவை ரஹமத்துல்லா, மதுரை மாவட்ட தலைவர் அசன் பாட்ஷா, மதுரை மாவட்ட துணை செயலாளர் ஹபிபுல்லா ஆகிய மூன்று பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தல்லாகுளம் போலீசார் அவர்களை தேடி வருவதாக கூறுகின்றனர்.